வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக பிரித்தானிய மாகா ராணியின் அனுமதி உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என கடந்த மாதம் இறுதியில் அந் நாட்டு பிரதமர் தெரசே மே அறிவித்திருந்தார்.

அரசியல் ஸ்திரதன்மையை பாதுகாப்பதற்காக இவ்வாறு தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வாக்களிப்பதற்கு செல்லுபடியான அடையாள அட்டைகள்-மஹிந்த தேசப்பிரிய

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி