வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களில் வேகமாக பரவியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள மேலும் 2 கட்டிடங்களிலும் தீப்பிடித்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், 51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் தீயில் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

Related posts

US destroyed Iranian drone in Strait of Hormuz, says Trump

එජාපයට හොම්බෙන් යාමට වෙන්නේ ඇයි? ෆිල්ඩ් මාෂල් සරත් ෆොන්සේකා කියයි

වී මිල ඉහල දැමිමට අගමැති කැමැත්ත පල කරයි