சூடான செய்திகள் 1

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு முன்னணி நாடொன்றில் தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டொ, தான் இராஜினாமா செய்யப் போவதாக கடந்த மே மாதம் 11 ஆம் திகதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அறிவித்தலுக்கு ஜனாதிபதி நேற்று(05) அனுமதி வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் கடந்த 2017 ஜூலை 01 ஆம் திகதி ஒஸ்டின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

புதிய ஜனாதிபதி செயலாளராக வருவதற்கு சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரிகள் பலரின் பெயர்கள் தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்