உள்நாடு

பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு : சீனாவிலிருந்து தொழில்நுட்பாளர் அழைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகளவு PCR பரிசோதனைகளை முன்னெடுத்த பிரதான PCR இயந்திரமானது தற்போது தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இன்று காலை தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த இயந்திரத்தினை சரி செய்ய தொழில்நுட்ப அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் குறித்த இயந்திரமானது தொடர்சியாக 20 நாட்கள் 24 மணி நேரமாக செயற்பட்டதனால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதனை சரி செய்ய சீன தொழில்நுட்பாளர்களை நாட்டிற்கு அழைத்து வரல் அவசியம் என்றும் அது தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!

சிக்குண்டுள்ள இந்தியர்களை இன்று அழைத்துச் செல்ல தீர்மானம்