அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கும் ITC நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்பின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) விரிந்த பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்தல், பொருளாதாரத்தில் இளைஞர் சமூகம் மற்றும் பெண்களின் அதிக பங்கேற்பு மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முதலீட்டு நட்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலா, ஏற்றுமதி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) போன்ற முக்கிய துறைகளை கண்டறிந்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார்.

சேதன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சர்வதேச வர்த்தக மையம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகளாவிய மாநாட்டில் இலங்கை பங்குபற்றவுள்ள நிலையில், இச்சந்திப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – வெள்ளத்தில் மூழ்கிய பாதை

editor