வகைப்படுத்தப்படாத

பிரதமர் மற்றும் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் நாளை முக்கிய கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தையின் பின்னர் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் தொழிற்சங்க இணைப்பாளர் வீ.ஜே ராஜகருணா இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பிரதமருடன் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய விவகாரம், ஹம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் தாங்கி தொகுதி மற்றும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Lanka IOC revises fuel prices

குணமடைந்தோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி