உள்நாடு

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாடுகளில்

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று(24) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினர்.

இதையடுத்து, இன்று காலை திருப்பதி ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை அவர்கள் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” நாடு திரும்பிய இலங்கை அணி

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

1000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!