வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு.

(UTV|COLOMBO) பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைகொண்டுவந்தவர்களின் நோக்கத்தை  தோற்கடிக்க பிரதமருக்குஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம்முடிவு செய்துள்ளது.

இன்று இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணிநேரம் இநு தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தைமேற்கொண்டது.

பிரேரணையைக் கொண்டுவந்தவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதிசெய்து அதனை கவிழ்ப்பதற்கே என தமது கட்சி உணர்ந்ததாலேயே இந்தமுடிவை முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களின்பாதுகாப்பு, அம்பாறை, திகன கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குமுழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டபின்னரே தமது கட்சியின் அரசியல் உயர் பீடம் கூடி இந்த இறுதி முடிவைமேற்கொண்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?

තැපැල් සේවකයින් අද සාකච්ඡාවකට සුදානම්

கோடபாய ராஜபக்ஷ கோரிய மனு ரத்து