உள்நாடு

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

(UTV | கொழும்பு) – பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை உரையாற்றினார்.

இதன்போது, மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், வங்காள விரிகுடா பிராந்தியங்களின் பொருளாதாரம் பூலோக பொருளாதாரத்துக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் கொழும்பில் கலப்பு முறையில் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் பிம்ஸ்டெக் 5ஆவது உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இலங்கை ஜனாதிபதி தலைமை தாங்கும் இந்த உச்சி மாநாடு, இன்றுடன் 3 நாட்களாக நடைபெறுகிறது.

இதில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றுள்ளனர்.

Related posts

மேலும் 65 பேர் பூரண குணம்

அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்