உலகம்

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

(UTV|பின்லாந்து) – திபெத் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வூஹான் மாநலத்திலிருந்து பின்லாந்திற்கு சுற்றுலா சென்ற 32 வயதுடை சீன பெண் ஒருவருக்கே இந்த நோய் தொற்றியுள்ளது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமக 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீனாவில் 7 ஆயிரத்து 711 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் சீன பிரஜைகள், பிளாஸ்ரிக் முகக்கவசங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் தற்போது முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகக்கவசங்களின் கேள்விக்கு ஏற்றவாறு அவற்றை விநியோகிக்க முடியாதுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக ஆசிய நாட்டவர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு பபுவா நியூ கினியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

ஜப்பானில் பயணத் தடை

ஸ்லோவாக்கியாப் பிரதமர் மீதான துப்பாக்கிசூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில்