உள்நாடு

“பிச்சை எடுத்தாவது பிள்ளைகளுக்கு வேளைக்கு உணவை வழங்குவேன்”

(UTV | கொழும்பு) – “பிச்சை எடுத்தாவது பிள்ளைகளுக்கு வேளைக்கு உணவை வழங்குவேன். அதில் என்ன தவறு?” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து உணவுப் பொருட்களை உதவியாகப் பெறுவது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம் தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1985ஆம் ஆண்டுக்கு முன்னரே கறுப்பு உடை அணிந்து வருவதாகவும் அன்றைய நாள் முதல் நான் ஒருன் சட்டத்தரணி என்பதனை சிலருக்கு மறந்து விட்டது. இது ஒன்றும் புதிதல்ல என அவர் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் சார்பில் வாதாடிய போது சிலர் கூட்டினுள் இருந்ததையும் நினைவூட்டுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தான் அமைச்சரானவுடன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் செயற்பாடுகளைஎ முதலில் சிந்தித்தேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார்.

Related posts

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

குளியாட்டிய சம்பவம்: 18வயது காதலி கைது

கொரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்