சூடான செய்திகள் 1

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)  பாரிய நிதி மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள 2 ஆவது நிலையான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் வழங்கு விசாரணை நேற்று ஆரம்பமானது.

மேலும் இந்த விஷேட உயர்நீதிமன்றத்துக்கு ஆர்.குருசிங்க சசிமகேந்திரன் மற்றும் அமல் ரனராஜா ஆகிய மூன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் கொழும்பு உயர்நீதிமன்றம் இலக்கம் 1இல் வழக்கு விசாரணை ஆரம்பமானது. நேற்றைய தினம் குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையை சேர்ந்த விஷேட வைத்தியர் ஆர்.எம்.சி.தென்னக்கோன் ரூபா 75 ஆயிரம் லஞ்சத்தை பெற்றதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை இதன்போது கையளிக்கப்பட்டது.

விஷேட வைத்தியருக்கு தலா 5 லட்ச ரூபா தனிப்பட்ட 2 பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இவரது கடவு சீட்டை இதன்போது நீதிமன்றத்துக்கு ஒப்படைப்பதற்கும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்