அரசியல்உள்நாடு

பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பிமல்

தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) துறைமுகங்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அமைச்சுக்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

“நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முறையான திட்டம் அரசிடம் இல்லை”

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்