சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணை

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 05 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக சட்ட மா அதிபரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்

சஜின் வாஸுக்கு பிணை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு