உள்நாடு

பாராளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழு ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் பெயர்களை நாளை(23) அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் நேற்று(21) நடைபெற்ற பாராளுமன்ற தெரிவு குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப் மற்றும் அரச கணக்கியல் தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்களை விரைவில் பெயரிடுவது குறித்து நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு