உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று எஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – இதுவரை எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(23) முதல் அடுத்த இரு நாட்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கையின் தேசிய கொவிட் செயலணி ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கமைய பெப்ரவரி 23ம் திகதி முதல் 25ம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நாராஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை இந்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கொழும்புக்கு வருவதால் இந்த வாரமும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு

அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர்

சீரற்ற காலநிலை – பல பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிப்பு