சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் மக்களுக்கு அனுமதி இல்லை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற இன்று (23) காலை 10.30 மணிக்குக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கு பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நுழையும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

editor

2945 மில்லியன் ரூபாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு