உள்நாடு

பாராளுமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் சம்பவம் தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள விசேட ஊடக அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையொன்றை அண்மித்த போது, ​​தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்

மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – லலித் ஜயகொடி

ஜனாதிபதியின் வேண்டுகோள்