சூடான செய்திகள் 1

பாராளுமன்றக் குழப்பநிலை அறிக்கை பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடாக நடந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (22) பாராளுமன்ற சபை அமர்வில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 15,16,17 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு ஒன்றினை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்

பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்

நாவலப்பிட்டியில் தீ இரண்டு குடியிருப்புகள் சேதம்