உள்நாடு

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

(UTV | கொழும்பு) – பாணந்துறை பள்ளிமுள்ள பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவதற்காக 6 காவற்துறை குழுக்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று அண்மையில் பாணந்துறை ஊரக்கடுவ பகுதியில் இருந்து மீட்கப்பட்டிருந்து.

அத்துடன் இந்த கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படம் டீ-56 ரக துப்பாக்கி பாணந்துறை வந்துரம்முள்ள பகுதியில் உள்ள மயானம் ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை