உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி

(UTV | கொழும்பு) –   மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (03) நடைபெற்ற COVID ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

T20 உலகக் கிண்ணத்திற்காக சிங்கங்கள் நாட்டிலிருந்து வெளியேறினர்

அபுதாபி உணவகத்தில் வெடிப்பு – இலங்கை இளைஞர் உயிரிழப்பு