உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக ஜுன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது ஆவது கட்டமாக ஜூலை 6 திகதி முதல் ஜூலை 17 திகதி வரை தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடவுள்ளது.

மூன்றாம் ஆவது கட்டமாக ஜூலை 20 திகதி தரம் 10 மற்றும் 12 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

நான்காவது கட்டமாக ஜூலை 27 திகதி  தரம் 03 – 04 –06 –07 –08 மற்றும் 09 தரங்கள்ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தரம் 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளுக்கான கற்றல் நடவடிக்கை கள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்