உள்நாடு

பாடசாலைகள் திறப்பு தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்து

(UTV | கொழும்பு) -கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க மேலும் ஒரு மாதம் செல்லும் என  கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் வைத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நாளில் மீண்டும் திறக்கப்படும் என்றும், பாடசாலை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த திகதியை அறிவித்த பின்னர், நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை

மாலக சில்வா கைது

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை