வகைப்படுத்தப்படாத

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன.

பாடசாலை சுற்றாடலை பாதுகாப்பதை உறுதி செய்து, பாடசாலை தவணை ஆரம்பமாவதுடன் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளைn வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கhக மேற்கொள்ள வேண்டிய

நடைமுறைகள் தொடர்பிலும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்கள்’வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து பாடசாலைகளிலும் குப்பைகள் மற்றும் நுளம்புகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பாதுகாப்பான முறையில் பாடசாலை சுற்றாடலை முன்னெடுக்கும் பொறுப்பு அதிபர்களுக்கு இருப்பதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு மாணவர்களை திறந்த வெளிகளில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நீரை பெருமளவில் அருந்தச் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குடை, தலைக்கவசம் மற்றும் குடைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்குமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலைகளில் உள்ள குடிநீர் தாங்கிகளை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் பாடசாலை அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Pacquiao beats Thurman on points to win the WBA Super Welterweight Title

கடும் வெப்பம் காரணமாக ஜப்பானில் 65 பேர் பலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு