சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 21 முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்கள் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், அதிபர்களை தெளிவூட்டுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார சபை…