உலகம்

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் அதனது சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிப்பதோடு, எந்த நிலைமையிலும் சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டக் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் ரஹிம்யார் கான், பங் நகரில் உள்ள கணேஷ் மந்திர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யுமாறும், பொது அமைதியைக் குலைக்க அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாகாண பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும். மேலும், பாகிஸ்தானியர்கள் நட்பு மற்றும் அமைதியை நேசிக்கும் மக்கள் ஆவார்கள்.

இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் ஒரு சில தவறாக வழிநடத்தப்பட்ட நபர்களின்  கண்டிக்கத்தக்க செயலாகும். மேலும் இத்தாக்குதலானது, ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் விரோதிகளின் சதிகளுக்கு ஏற்ப செயல்படும் திருப்தியற்ற மக்கள் கூட்டமாகும். பாகிஸ்தானின் எதிரிகள்,  அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் எதிரிகள் ஆவார்கள். மேலும், இதுபோன்ற கொடூரமான செயல்கள் மூலம் பிறநாடுகளிடம் உள்ள பாகிஸ்தானின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் நியாயமற்ற, வெறித்தனமான அணுகுமுறையை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

யார் என்ன சொன்னாலும் , யார் பாகிஸ்தானின் நற்பெயரை கெடுக்க முயற்சி செய்தாலும், பாகிஸ்தான் அரசும் மக்களும் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நின்று அனைத்து அம்சங்களிலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாத்து வரும் என்பது உறுதி.

Related posts

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாடு

கொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிளேக் நோய்