வணிகம்

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்து விளக்கம்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலய வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்ப்பாளர் திருமதி அஸ்மா கமால் ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சபைக்கு விஜயம் செய்து அதன் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, வர்த்தக சபையின் பணி மற்றும் முன்முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு, இளைஞர்களுக்கான தொழில்பயிற்சி மற்றும் மாவட்ட பெண்கள் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் உயர் சாத்தியமான துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல்வேறு முயற்சிகள் குறித்து திருமதி அஸ்மா கமால் விளக்கினார்.

 

Related posts

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்