விளையாட்டு

பாகிஸ்தான் அணி தலைவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறைகளை மீறி இனவெறி கருத்து வெளியிட்டதற்காக அவருக்கு 4 போட்டிகளில் விளையாட இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , சப்ராஸ் அஹமட் தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

 

 

 

Related posts

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

ஓஷத பெர்னாண்டோவுக்கு ஓய்வு

IPL தொடர்லிருந்து விலகிய மற்றுமொரு வீரர்