விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் மாற்றம்

(UTV|COLOMBO) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து சர்பராஸ் அஹ்மட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்ததனால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது.

மேலும் அண்மையில் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி இருபதுக்கு- 20 தொடரை 0-3 என இழந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டிக்கு பாபர் அசாமும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு

ஐசிசி தரவரிசை பட்டியலில் முகமது நபிக்கு முதலிடம்