சூடான செய்திகள் 1

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – தந்தை, மகன் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு (17) பல்லகெடுவயிலிருந்து பிடபொல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எல்ல – கபரகல பிரதேசத்தில் சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அவரின் 3 பிள்ளைகள் சிகிச்சைக்காக தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 35 வயதான தந்தையும் 8 வயதான மகனும் உயிரிந்துள்ளனர்.

ஹெலபுபுல பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

12 மற்றும் 8 வயதான சிறுவர்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது…

தோட்டத் தொழிலாளர்களின் ஆர்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

மழையுடனான காலநிலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்