சூடான செய்திகள் 1

பல மாகாணங்களில் கடும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் உள்ள கடற்பிராந்தியங்களில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு திசையின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகமானது, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றராக நிலவும்.

மன்னார் முதல் புத்தளம் – கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் என்ற அளவில் நிலவும்.

இந்த பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாகவும் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலுமான கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் என்ற அளவில் வீசும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த பகுதிகளில் கடல் அலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் அது தொடர்பில் கடல்சார் பணியாளர்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரான காலநிலை நிலவுக்கூடும்.

இதனுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…