உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

(UTV|கொழும்பு) – 2019 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று(05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

மேலும், கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை