வகைப்படுத்தப்படாத

பயிர்ச் செய்கை காணிகளை குடியிருப்புக்களாக மாற்றக்கூடாது

(UTV|COLOMBO)-பயிர்ச் செய்கை மேற்கொள்ளக்கூடிய காணிகளை  மக்கள் குடியிருப்புக்களாக மாற்றக்கூடாது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று வளர்ச்சி கண்டுள்ள நாடுகளில் நகரங்கள் சார்ந்ததாகவே குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. பயிர்ச் செய்கை உள்ளிட்ட தேவைகளுக்காக காணிகள் விட்டு வைக்கப்படுகின்றன என்று அமைச்சர் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறிப்பிட்டார்.

வீடுகளை அமைப்பதில் தொலைநோக்கு அவசியம். வீடுகளுக்காக வசதிகளை முறையாகத் திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்களை அமைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது