உள்நாடு

பயாகல – பேருவளை பகுதிகளுக்கிடையில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

(UTV | களுத்துறை) – தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று பயாகல – பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, விமான தரையிறக்கப்பட்ட இடத்துக்கு விமானப்படை குழுவொன்று சென்றுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

ஒன் அரைவல் விசா இரத்து

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம்

editor