உள்நாடு

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

Related posts

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

மைத்திரிக்கும் ரணிலுக்கும் மீளவும் அழைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று