வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள தீவில் நேற்றிரவு பாரிய நிலஅதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக இதன் தாக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பப்புவா நியூகினியா மற்றும் அதற்கு அருகிலுள்ள சொலொமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Related posts

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

மும்பை குண்டு வெடிப்பில் தேடப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி பரூக் துபாயில் கைது

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(18)