வணிகம்

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 34,475 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3,256 ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வருட ஜனவரி மாதத்தில் 195 மகிழுர்ந்துகளும், 78 சிற்றூர்ந்துகளும், 20 முச்சக்கரவண்டிகளும், 1, 228 உந்துருளிகளும் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

ரயில் மற்றும் பேரூந்துகளின் வருமானத்தில் வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தை நாளை திறப்பு குறித்த அறிவிப்பு