சூடான செய்திகள் 1

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கான இல்லங்களின் வீட்டு உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் 25ஆவது நினைவஞ்சலி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது வீர வீராங்கனைகளுக்கான 06 இல்லங்களில் 3 இல்லங்களுக்கும் கொழும்பு மாகாணத்தில் 5,000 குடியிருப்புவாசிகளுக்கான இல்லங்களை வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் முகமாக ஜனாதிபதியினால் வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹேமா பிரேமதாச அம்மையார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்