உள்நாடு

 பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்

(UTV | கொழும்பு) –  பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்

கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முந்தைய வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள் விற்பனை குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதன் பின்னர், 60% ஆக இருந்த QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் விற்பனை 80% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பண்டிகை கால எரிபொருள் தேவைக்கு ஏற்ப, அடுத்த சில நாட்களுக்கு நாளாந்த எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 4,650 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,500 மெற்றிக் தொன் ஆட்டோ டீசல் நாளாந்தம் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் – மூவர் கைது

editor

ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

போராட்டத்தில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!