வணிகம்

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.

போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக குறித்த நிலையத்தின் விற்பனை உணவுகளின் தரம் மற்றும் விவசாய வர்த்தக செயற்பாடுகள் பிரிவின் தலைமை அதிகாரி துமிந்த பிரியதர்சன குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையில் மாத்திரமே மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID-19 க்கு பின்னர் மாணவர்களை தயார்ப்படுத்தும் SLIIT Biotechnology கற்கை

சீமெந்துவின் விலை குறைப்பு!

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு