வகைப்படுத்தப்படாத

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் தற்போது நாடாளாவிய ரீதியில் அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான அஞ்சல் சேவையாளர்கள் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளது.

நேற்யை தினம் அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அஞ்சல்மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முதன்மை அஞ்சல் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அஞ்சல் திணைக்கள நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியும் அவர்கள் இந்த சேவைப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அமெரிக்க பங்குச் சந்தை சரிவு

‘Chaos’ as Hong Kong Police and protesters clash

දියර කිරි ලීටරයක මිල ඉහළ දැමීමට කටයුතු