சூடான செய்திகள் 1

படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு கோப்பாபுலவு பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்தலைமையகத்திற்கு முன்னால் படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று இன்று(14) அதிகாலை 5.40 மணியளவில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் ஒரு படையினன் உயிரிழந்துள்ளதுடன் 8 படையினர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் படைப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts

நான் எதற்கும் பயந்தவன் அல்ல

மின்னல் தாக்கி ஐவர் காயம்

பிரதமர் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு