விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை குவித்தது.

203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்த்தினால் தோல்வியை தழுவியது.

 

 

 

 

 

 

 

 

Related posts

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

இலங்கையிலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள்

பாண்டியா மற்றும் ராகுல் மீதான போட்டித் தடை நீக்கம்?