விளையாட்டு

பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

(UTV | துபாய்) – ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் 201 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்பாப் அணியின் தலைவர் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

பூரனை தவிர வேறு எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்ததாலும், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும் பஞ்சாப் அணி 16.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

55 பந்தில் 97 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

Related posts

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி