சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

புறக்கோட்டை – மெனிங் சந்தையில்-நாட்டாமிகள் பணிப்புறக்கணிப்பு

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு