உள்நாடுவகைப்படுத்தப்படாத

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராக பசில் போட்டியிடுவதற்கு கூடுதல் சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் பசில், அமெரிக்காவிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பும் பசில் ராஜபக்சவிற்கு விமான நிலையத்திலிருந்து வரவேற்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் நாளை தலைமை உரை