கிசு கிசு

பசில் பதவி நீக்கப்படுவாரா?

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரச சார்பு பிக்குகள் குழுவொன்றும் நேற்று (31) ஜனாதிபதியிடம் பலமான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கவனம் செலுத்தியுள்ள அரசாங்கப் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று, நிதியமைச்சரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

Youtube செயலிழப்பு-ஹேக்கிங் செய்யப்பட்டதா?

சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் இங்கு இல்லை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?