அரசியல்உலகம்

பஷார் அல் அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு – கிரெம்ளின் பேச்சாளர்

சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு புகலிடமளிப்பது என்ற தீர்மானத்தை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே எடுத்தார் இது அவரது தனிப்பட்ட தீர்மானம் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

புட்டின் தனிப்பட்டரீதியில் இந்த முடிவை எடுத்தார் என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

எனினும் அசாத் ரஸ்யாவில் எங்குள்ளார் என்பதை உறுதி செய்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

புட்டினும் அசாத்தும் எப்போது இறுதியாக சந்தித்தார்கள் அவர்கள் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

சிரியாவில் ஆட்சியில் உள்ளவர்களுடன் ரஸ்யா தொடர்புகளை பேணும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் – அனுர

editor

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது