உள்நாடு

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

(UTV|கொழும்பு ) – பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான “ஷதீநொடா” கப்பலானது நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் பங்களாதேஷ் கடற்படையின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட மேலும் சிலர் வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது குறித்த குழு இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கப்பலானது நாளைய தினம் கொழும்பிலிருந்து பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் ,

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

சிசுவை ICU-வில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்!