சூடான செய்திகள் 1விளையாட்டு

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரை முழுமையாக கைபற்றியது இலங்கை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மெத்தியூஸ் 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

அதேபோல பந்து வீச்சில் ஷாபில் இஸ்லாம் மற்றும் சௌமிய சர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கையின் சிறப்பான பந்து வீச்சியின் காரணமாக
36 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில், இலங்கை அணி 122 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தயுள்ளது.

Related posts

கலா ஓயா பெருக்கெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி தொடர்பான அறிக்கை விரைவில்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!